சேலம், ஜூலை 20- விவசாயிகளை ஏமாற்றும் ஹட்சன் நிறுவனத்தின் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டி யக்கத்தினர் மனு அளித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கக் கூட்டியக்கத்தின் செயலா ளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் தலை மையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரி வித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், காரிப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹட்சன் நிறு வனம், தலைவாசல் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 6 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் நிறுவ னத்தை நடத்தி வருகிறது. இந்நிலை யில், கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை சுமார் 36 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பாலைக் கொள்முதல் செய்யாமல் நிறுத்திவிட்டது.
இத னால், பல லட்சம் லிட்டர் பால் வீணா னது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. இதற்கிடையே, ஹட்சன் நிறுவ னம் தொடர்ச்சியாக அரசின் விதி முறைகளை மீறியதால் மின்வாரியம் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி மின் இணைப்பு துண் டிக்கப்பட்டது. மேலும், அந்நிறுவனத் தில் இருந்து வெளியேற்றப்படும் மாச டைந்த நீரினால் பெரியேரி, நத்தக் கரை, கரடியவரம் உள்ளிட்ட 100 கிரா மங்களில் உள்ள நீராதாரங்கள் மற்றும் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகி வருகி றது. ஆகவே, ஹட்சன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும், கால்நடை களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். பாலின் விலையை குறைத் ததை, மீண்டும் உயர்த்தி வழங்க வேண் டும். இல்லையெனில் ஹட்சன் நிறுவ னத்தை கண்டித்து தமிழ்நாடு விவ சாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத் தப்படும் என அம்மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.