இளம்பிள்ளை, ஜன.9- இளம்பிள்ளை அருகே மின்மாற்றியில் வியாழனன்று திடீர் தீ விபத்து ஏற்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த தப்பக்குட்டை கிராமத்தில் உள்ள அம்மகுத்தி தோட்டம் பகுதியில் மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் வியாழ னன்று மதியம் திடீரென தீ பிடித்து வெடித்தது. மேலும் மின் மாற்றியில் உள்ள ஆயில்கள் கீழே சிதறியதால் மின் மாற்றி முழுவதும் தீப்பிடித்து எரிந்து சேத மடைந்தது. இதுகுறித்த தகவலறிந்த மின்வாரியத்தினர் வேம்படிதாளம் துணை மின்நிலையம் பகுதியில் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து அப்பகுதி நெசவாளர்கள் கூறுகையில், இளம்பிள்ளை மின்சார துறையினர் மின் மாற்றில் முறையாக பரா மரிப்பு பணியை மேற்கொள்வதில்லை. இதனால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் விசைத்தறி, ஜவுளித் தொழில் நிறைந்த இப்பகுதியில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாத வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தீப்பிடித்து எரிந்த மின் மாற்றியை உடனடியாக மாற்றி அமைத்து நெசவுத்தொழில் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரி வித்தனர்.