சேலம், நவ.9- தமிழக முதல்வரின் மாவட்டமான சேலத் தில் போக்குவரத்து பணிமனைக ளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்களை போக்குவரத்து அதிகாரிக ளும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளா மல் இருப்பதற்கு போக்குவரத்து தொழிலா ளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்ட மாகும். அரசின் நலத்திட்டங்கள் அதிக மாக இம்மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுவ ருகிறது. தமிழக முதல்வர் அனைத்து திட்டங் களையும் நேரடியாக பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்கிவருகிறார். ஆனால் அரசு அலுவலகங்களில் போதிய அடிப் படை வசதிகள் மிக குறைவாகவே உள்ளது. பெயரளவிற்கு பிரபலப்படுத்தி வரும் சில முக்கிய துறைகளின் அலுவலக பராமரிப்பு மிகவும் மோசமான நிலை யிலேயே உள்ளது. குறிப்பாக சேலம் மாவட்ட போக்கு வரத்து துறைக்கு சொந்தமான பணிமனைகள் சிதிலமடைந்த காட்சி பொருளாகவே உள் ளது.சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து துறை தனி கோட்டமாக செயல்படுகிறது. இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்ளடக்கிய சேலம் கோட்டமாகும். ஆனால் பேருந்துகளின் பணிமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் சுகா தார சீர்கேடுகள் அதிகளவில் உள்ளது. குறிப் பாக சேலம் மாநகரத்தில் உள்ள மெய்யனூர், பள்ளப்பட்டி, ஜான்சன் பேட்டை1, ஜான்சன் பேட்டை2, எருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போக்குவரத்து பணி மனைகள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதில் ஜான்சன் பேட்டை பகுதி யில் உள்ள பணிமனையிலிருந்து 110 பேருந் துள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு 700 போக்குவரத்து தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இதே போல் பள்ளப் பட்டி பணிமனையில் 28 பேருந்துகளும், 136 தொழிலாளர்களும் பணியாற்றி வருகின் றனர்.
அடிப்படை வசதிகளற்ற பணிமனைகள்
போக்குவரத்து சேவை 24 மணி நேரமும் இயக்கப்படுவதால் போக்குவரத்து தொழிலா ளர்கள் தொடர்ந்து பணியாற்றிவருகின்றனர். ஆனால் தொழிலாளர்களுக்கு தேவையான ஓய்வறை, கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவ சிய தேவைகளை கூட போக்குவரத்து துறை அதிகாரிகளால் சரிசெய்யப்படவில்லை என்பதே அனைத்து தொழிலாளர்களின் குற் றச்சாட்டாக உள்ளது.
வெள்ளக்காடான பணிமனைகள்
போக்குவரத்து துறை பணிமனைகளை சாதாரண மழைக்கே வெள்ளக்காடாக மாறி வரும் நிலை உள்ளது. இதனால் பேருந்து கள் மற்றும் வாகன நிறுத்துமிடம், பணிமனை கூடங்கள் உள்ளிட்ட அனைத்து பணிமனை வளாகங்களும் வெள்ளக்காடாக மாறியுள் ளது. ஜான்சன் பேட்டை பணிமனையில் ஒரு படி முன்னேறி பேருந்துகளுக்கு நிரப்ப பட வைத்திருந்த டீசல் டேங்கில் பெருமளவிற்கு மழை நீர் உள்ளே சென்றதால் அங்கு இருந்த அனைத்து டீசலும் வீணாகியுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாம்புகள் உள்ளிட்ட வீச பூச்சிகள் பணிமனையில் தஞ்சமடைந் துள்ளது.
ஓடைகளை தூர்வாராததால் ஏற்பட்டதன் விளைவு
மழைக்காலங்களில் ஓடைகள் உள்ளிட்ட வற்றை மாவட்ட நிர்வாகம் முறையாக தூர் வாரப்படாமல் இருந்ததாலும், பணிமனை களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற் றாமல் இருந்ததாலும் வெள்ள நீர் வெளியே செல்லாமல் போக்குவரத்து பணிமனை தேங்கியுள்ளது. மேலும் மாவட்ட நிர்வா கத்திடமும், போக்குவரத்து நிர்வாகத்திடமும், தொழிலாளர்கள் பல முறை புகார் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்காததன் விளைவே வெள்ள நீர் சூழ்ந்ததற்கு காரணமாக கரு தப்படுகிறது.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு
போக்குவரத்து துறையில் நவீனமயம் என சிறப்பு பேருந்துகள், டீலக்ஸ் பேருந்து கள், குளிர்சாதன பேருந்துகள், சுற்றுச்சூழ லுக்கு ஏற்ற பேருந்துகள் என பேருந்துகளை இயக்கி வரும் தமிழக முதல்வர் அந்த பேருந் துகளை பராமரிக்கும் பணிமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மேலும் அங்கு பணியாற்றும் போக்குவரத்து தொழிலா ளர்களின் பாதுகாப்பிற்கும், அடிப்படை வச திகளை மேம்படுத்த வேண்டுமெனவும் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்க ளின் எதிர்ப்பாக உள்ளது.
- எழில் சேலம்.