சேலம் அருகே ஆற்றில் மூழ்கி 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் கோகுலப்பிரியன் உயிரிழந்துள்ளார். குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.