tamilnadu

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மாணவன் பலி

 கோபி, ஆக.31- கோபிசெட்டிபாளையம் அருகே செங்கல் லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாண வர் லட்சுமணன், 10 ஆம் வகுப்பு மாணவர் மதன்குமார் மற்றும் கூலித்தொழிலாளி விஜய் ஆகிய மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் கொளப்பலூர் பகுதியை நோக்கி சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை விஜய் ஓட்ட பின்னிருக்கையில் மாணவர்கள் இருவரும் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வடுகபாளையம் பிரிவு அருகில் சென்ற போது எதிரே வந்த செங்கல் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் இரு  சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப் பட்டனர். இதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போரா டிய மதன்குமார் மற்றும் விஜய் ஆகிய இருவரை அரு கிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் மேல் சிகிச்சைக்காக இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கோபிசெட்டி பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.