திருவண்ணாமலை, பிப். 12- திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (45). இவரது மகன் தமிழ்ச்செல்வன் (10). இவன் தச்சம்பட்டு அருகே உள்ள அல்லி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய தமிழ்ச்செல்வன், தனது நண்பர்களு டன் தச்சம்பட்டு ஏரிக்கு குளிக்கச் சென்றான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தமிழ்செல்வன் தண்ணீரில் மூழ்கினான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் இதுகுறித்து அவனது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவனது பெற்றோரும், பொது மக்களும், ஏரிக்குச் சென்று தமிழ்ச்செல்வனை தேடினர். இரவு முழுவதும் தேடிய நிலையில், புதன்கிழமை காலை தமிழ்ச்செல்வன் சடலமாக மீட்கப்பட்டான்.