ஓமலூர், ஜன.28- ஓமலூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை யொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஜன.20 முதல் 27 ஆம் தேதி வரை 31வது சாலை பாது காப்பு வார விழா நடை பெற்றது. இதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந் நிலையில் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தினரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ரோஜா மலர் கொடுத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், போக்குவரத்து ஆய் வாளர் சக்திவேல், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீனாகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து மகளிர் மட்டும் கலந்து கொண்ட தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என திரளாக கலந்து கொண்டனர்.