tamilnadu

img

ஒதுக்கீடு செய்யப்படும் பொருளை முறையாக வழங்குக இளம்பிள்ளையில் ரேசன் கடை முற்றுகை

இளம்பிள்ளை, ஜூன் 3- இளம்பிள்ளை அருகே ஒதுக்கீடு செய்யப்படும் பொருளை முறையாக விநி யோகிக்கக்கோரி ரேசன் கடையை பொதுமக்கள்  முற் றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், சேலம் மாவட் டம், இளம்பிள்ளை அருகே உள்ள ஆரியகவுண்டம்பட்டி கிராம பகுதியில் இயங்கி வரும்  இந்த ரேசன் கடையில் சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருட் களை வாங்கி பயன்பெற்று வருகிறோம்.

இந்நிலையில் ரேசன் கடையில் பணி யாற்றக்கூடிய ஊழியர் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை  எடை குறைவாக வழங்கியும், சரியான நேரத்திற்கு கடை திறக்காமலும் உள்ளார். இதுகுறித்து கேட்கும் பெண்களிடம் தரக்குறைவாகவும் பேசி வருகிறார். மேலும், கொரோனா ஊரடங்கு காரண மாக அரசு ஒதுக்கீடு செய்துள்ள கூடுதல் அரி சியை முறையாக வழங்காமல் இழுத்தடிப்பு செய்தும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வர்களுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரி சிக்கு, 20 கிலோ மட்டும் வழங்கி வருகிறார். இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஊழியரை மாற்றக்கோரி பல முறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன்காரணமாக முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரி வித்தனர்.  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டமானது, அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு முன் வராததால் ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற நிர் வாகத்தின் சார்பில்  கிராம மக்களிடம் சமா தானப் பேச்சு நடத்தினார். இதில் கடை ஊழி யரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.