சேலம், ஆக.31- புகார் கொடுக்க சென்ற இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சேலம் வடக்கு மாநகர செய லாளர் மீது பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து வெள்ளியன்று வாலிபர் சங் கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். சேலம் சின்னரி வயக்காடு பகுதியை சேர்ந்த வெள்ளி வியா பாரி முருகன் என்பவர் தனக்கு சொந்தமான 6 கிலோ வெள்ளி மாயமானது குறித்து புகார் அளிக்க சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்தார். அவருடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர் வடக்கு செயலாளரான ஆர்.வி. கதிர்வேல் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த உதவி ஆய்வாளர் ஒருவர், புகார் அளிக்க முருகனுடன் வந்திருப்ப வர் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த வர் என காவல் ஆய்வாளர் சக்தி வேலிடம் தெரிவித்துள்ளார். இத னால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் திடீரென வாலிபர் சங்க செயலாளர் கதிர்வேலுவின் சட்டையை பிடித்து வெளியே போ என தெரிவித்து தாக்குதல் நடத் தியுள்ளார். முன்னதாக, பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர், தனது எல் லைக்குட்பட்ட பகுதிகளில் புகை யிலை பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் சட்டவி ரோத மதுபானக் கடைகள் உள் ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். இதற்கு எதிராக வாலிபர் சங் கத்தினர் கடந்த காலங்களில் போராட்டங்கள் நடத்தி வந்துள் ளார். இதன் காரணமாகவே காவல் ஆய்வாளர் சக்திவேல், வாய்ப்பைபயன்படுத்தி காவல் நிலையத்திற்குவந்த கதிர்வேலை தாக்கியதாககூறப்படுகிறது. இந்நிலையில் புகார் கொடுக்க வந்த காரணத்திற்காக காவல் ஆய்வாளர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை அறிந்த வாலிபர் சங்கத்தினர் வெள்ளி யன்று பள்ளப்பட்டி காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். இப் போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கந்த சாமி, மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் வடக்கு மாநகர நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மேலும், பள்ளபட்டி காவல் ஆய் வாளர் மீதுஉரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவோம் என வாலிபர் சங்க நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்து போராட் டத்தை தொடர்ந்தனர். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.