சேலம், மார்ச் 5- எட்டுவழிச் சாலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது பதியப் பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியிடம் வியாழனன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம்-சென்னை இடையிலான எட்டுவழி சாலை திட்டம் அறிவித்த நாள் முதலே விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சி விழாவிற்கு வந்தி ருந்தார். அப்போது, எட்டு வழி சாலை திட்டம் வேண்டாம் என்பதை வலியு றுத்தி விவசாயிகள் முதல்வரிடம் மனு கொடுக்க காத்திருந்தனர். ஆனால் இரவு வரை காத்திருந்தும் விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதன் பிறகு அமைதியாகவும், போக்கு வரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் விவசாயிகள் கலைந்து சென்றனர். ஆனால், இதன் பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள் ளது. இந்நிலையில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வியாழனன்று விசார ணைக்காக அனைத்து விவசாயிகளும் வந்திருந்தனர். அப்போது விவசாயிகள் தங்கள் மீது போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நீதிபதியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, தமிழக முதல்வரை அமைதியான முறையில் சந்திக்க காத்திருந்த எங்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தி ருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி விவசாயி கள் அமைதியாக போராடும் பட்சத்தில் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் தொடர கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் சேலம் போலீசார் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே, எங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யுமாறு விவசாயிகள் தெரிவித்தனர்.