சேலம், ஜூன் 9- சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் ஐந்தாவது நாளாக விவசாய நிலத்தில் கால்நடைகளை கையில் பிடித்து நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை வழக்கு உச்சநீ திமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்தியஅரசு மனுத் தாக்கல் செய் தது. இதற்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் கருத்து தெரி வித்தனர்.இதனைக் கண்டித்து சேலம் பாரப்பட்டி, குப்ப னூர், கல்பட்டி ,அயோத்தியபட்டினம், ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் கடந்த நான்கு நாட்களாக விவசாய நிலங்களில் நின்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஐந்தாவது நாளான செவ்வாயன்று சேலம் எருமாபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கால்நடை களை பிடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், தனி மனித இடைவெளியை கடைபிடித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.