சேலம், மார்ச் 7- நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள இந்திரா நகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் தினேஷ்குமார் என்கிற வீரபத்திரனந்தா. பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரம அலுவ லகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியாளராக இருந்து வந்ததாக தெரிய வருகிறது. அங்கு ஆறு மாதங்கள் மட்டுமே இருந்த தினேஷ்குமார் அங்கிருந்து வெளியேறி மீண்டும் ஆறகலூர் திரும்பியுள்ளார். இதன்பின் கடந்த ஓராண்டாக தினேஷ்குமார் சென்னையில் வேலை தேடி கொண்டிருந்த அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று வீட்டில் தினேஷ்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரது தந்தை ராமசந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உயிரிழந்தது தொடர்பான தகவலை உறவி னர்களுக்கு தெரிவித்துவிட்டு சனியன்று மாலை அவசர அவசரமாக தினேஷ் குமாரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த தலைவாசல் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ்குமாரின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, வீரபத்தி ரனந்தா தனது வீட்டிற்கு வந்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீ சார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.