tamilnadu

img

ஓடைப்பாலம் - தார்சாலையை சீரமைத்திடுக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

சேலம், ஆக. 10- ஓடைப்பாலம் மற்றும் தார்சாலையை சீரமைக்காமல் மெத்தனமாக உள்ள சேலம் மாநகராட்சியை கண்டித்து வாலிபர் சங் கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  

சேலம் மாநகர் 26 ஆவது கோட்டம், சின் னேரி வயல்காடு பகுதியில், பகத்சிங்,  நேதாஜி தெருக்களில்  பத்து மாதங்களாக சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி கிடப்பில் போட்டதை உடனே துவங்க வேண்டும். அப்பகுதி ஓடைப் பாலத்தை விரிவுபடுத்தி தடுப்புச் சுவர் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த மாநக ராட்சி அதிகாரிகள் 30 நாட்களில் கோரிக் கைகளை நிறைவேற்றப்படும்  என உத்திர வாதம் அளித்ததன் அடிப்படையில் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக, இப்போராட்டத்தில் மலை வாழ் இளைஞர் சங்கத்தின்  மாநிலச் செயலா ளர் என்.பிரவீன்குமார், சேலம் வடக்கு மாந கரத் தலைவர் பி.சதீஷ்குமார், மாநகரச் செய லாளர் ஆர்.குருபிசன்னா, மாநகரப் பொரு ளாளர் டி.மனோகரன், ஆர்.வி.கதிர்வேல், எஸ்.சசிக்குமார், ஜோசப், லட்சுமணன், சிவா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள் ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.