tamilnadu

img

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 4 -மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ்  2 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி மதிய உணவு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சேலம் மற்றும் திருப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அரசுப் பள்ளிகளை தத்துக் கொடுப்பது என்ற பெயரில் தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அதனை பாதுகாக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தை பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணாக்கர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். கல்வி கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஎஸ்சி உள்ளிட்ட  அனைத்து பள்ளிகளிலும் 25 சதவிகித இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.சேலம் மாவட்ட ஆட்சியர் முன்பு வாலிபர் சங்கத்தின் மாநிலதலைவர் ரெஜிஸ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க சேலம் மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் பி.கணேசன், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ் மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.திருப்பூர்திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பி.ஞானசேகரன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள்,வேலம்பாளையம் நகரச் செயலாளர் அனீபா, இந்திய மாணவர் சங்கமாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது, வாலிபர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் வாலிபர் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.