tamilnadu

img

அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.12- அரசு ஊழியர் சங்க நிர்வாகி களை பழிவாங்கும் நடவடிக் கையைக் கைவிடக்கோரி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ போராட் டத்தின் போது களப்பணியாற்றிய  தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க முன் னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிர மணியன் ஓய்வுபெறும் நாளில் பழிவாங்கும் நோக்கத்தோடு தற் காலிக பணிநீக்கம் செய்யப் பட்டதை கண்டித்தும், அவருக்கு  முறையாக ஓய்வுபெற ஆணை  வழங்க வேண்டும். இதேபோல்  கரூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர், 5  ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். இதனை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் வே.செந்தில்குமார் உள்ளிட்ட  சங்க நிர்வாகிகளை அரசியல் நிர்ப்பந்தத்தின் காரண மாக வேறு மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித் தார். மாநில துணைத் தலைவர்  ஜி.பழனியம்மாள், மாவட்டச் செய லாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட மகளிர்  துணைக்குழுஅமைப்பாளர் பி.எஸ்.இளவேனில் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கி  பேசினர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச்  செயலாளர் ஆர்.ஆறுமுகம்,  மாவட்டத் தலைவர் என்.ருத்ரையன், பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம்.சிவப்பிரகாசம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன், வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயவேல் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   

சேலம்

இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டதலைவர் சி.முருக பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வம்,   ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித் துறை அலுவலர் சங்க மாநில  துணைத்தலைவர் ந.திரு வேரங்கன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு  எதிராக முழக்கங்களை எழுப் பினர்.