மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அங் குள்ள கபினி மற்றும் கிருஷ் ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கபினி நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி திங்களன்று (ஜூலை 19) காலை நிலவரப் படி காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப் பட்டு உள்ளது.