மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து தண்ணீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரத்து300 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேட்டூர் அணைக்கு 5 ஆயிரத்து 712 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கனஅடியும்,கால்வாயில் 700 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.