சேலம், பிப். 6- சேலம், உத்தமசோழபுரத்தில் 7.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சேலம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உத்தமசோ ழபுரம் பகுதியில் 40 ஆண்டுகள் பழமையான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. மிகவும் பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அதை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த னர். இதையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோண்மணி தொடங்கி வைத் தார். அதனைத்தொடர்ந்து வேலங் காடு பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிக ளின் கீழ் ரூ.8.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் பயன் பாட்டுக்காக மனோன்மணி தொடங்கி வைத்தார். இதில் தலை வர் பி.வி.பெருமாள், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், அரியா னூர் பழனிசாமி, மாவட்ட கவுன் சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உட னிருந்தனர்.