சேலம், ஜூலை 26 - சேலத்தில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவல கம் துவங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரி வித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் நகர் ஊர மைப்புத் துறை மண்டல அலுவலகம், உள்ளூர் திட்டக் குழுமம், சேலம் இரும்பாலைப் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகிய அலுவலகங்கள் ஒருங்கி ணைந்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட உதவி இயக்குநரை அலுவலராக நியமிக்கப்பட்டு சுப்ரம ணிய நகரில் செயல்பட்டவுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் நகர் ஊர மைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கட்டி டம் மற்றும் மனைப்பிரிவு அனுமதி தொடர்பாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரி வித்துள்ளார்.