இளம்பிள்ளை, அக்.31- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகில் சுகாதார வளாகத்தில் மனித கழிவுகள் திறந்த வெளியில் கிடப்பதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்திற் குட்பட்ட கூடலூர் கிராமம் தேவராயன்பாளையம் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளா கத்தில் மனித கழிவுகள் நிறைந்து திறந்த வெளியில் வழிந்தோடுகிறது. இதனால் இப்பகுதியில் குடி யிருந்து வரும் பொது மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரிடமும் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கழிவுகளை அகற்றி சுகாதாரமான நிலையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.