tamilnadu

img

5,8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன. 11-  ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவித்துள்ள பொதுத்தேர்வு என் பது உளவியல் ரீதியாக மாணவர் களின் கல்வி திறனை பாதிப்பதோடு ஏழை, எளிய கிராமப்புற குழந்தைக ளின் கல்வி வளர்ச்சிக்கு எதிரானதாக இருக்கும். இதன்மூலம் பிஞ்சு குழந் தைகளின் உள்ளத்தில் தேர்வு பயத்தை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என்ப தால் தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.  இதேபோல்,  தேசிய புதிய கல்வி  கொள்கையை திரும்பப் பெற வேண் டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவ டிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் செ.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் ந.பெரியசாமி, ந. நல்லம்மாள் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண் டனர்.