tamilnadu

img

ஊதிய உயர்வு வழங்கிடுக மருத்துவர்கள் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்

சேலம், அக். 26-  ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி 2ஆவது நாளாக அரசு மருத்துவர்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஊதிய உயர்வு, 50 சதவிகித இட ஒதுக் கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 25ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக 2ஆவது நாளான சனியன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகம் முன்பாக நூற்றுக்கும்  மேற்பட்ட மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.                          
கோவை
இதற்கிடையே, கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ரவிச்சங்கர் சனியன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு மருத்துவர்கள் பல கட்ட போராட்டம் நடத்தியும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. மருத்து வர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையெனில் வரு கின்ற அக்.30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசு மருத் துவர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்பார்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகை யில், இந்த போராட்டம் நடத்தப் படும் என அவர் தெரிவித்தார்.