tamilnadu

img

கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கிடுக சிபிஎம் கோரிக்கை

சேலம், நவ. 24- கோவில் நிலத்தில் குடி யிருப்பவர்களுக்கு குடி மனை பட்டா வழங்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பொது மக்களிடம் விண்ணப்பம் பெறும் இயக்கத்தில் ஞாயி றன்று ஈடுபட்டனர்.  கோவில் நிலங்களில் 5  ஆண்டுகளுக்கு மேல்  வசிக்கும் மக்களுக்கு அரசாணை (எண் 318/19)  படி பட்டாவழங்க வேண்டும்.  இதுகுறித்து  குடியிருப்பு வாசிகளிடம்  விண்ணப்பம் பெறும் இயக்கம் நடைபெற்றது. இந்த விண்ணப்பங்கள் பெறும் இயக்கம் நவ.22 ஆம் தேதி முதல் நடைபெற்றது வருகிறது. இந்த விண் ணப்பங்களை நவ.26ஆம் தேதியன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சேலம் வடக்கு பகுதி குழுவிற்கு உட்பட்ட    சாமிநாதபுரம், சின்னேரிவயல்  பகுதி களிலும், மேற்கு பகுதி குழு  அரியாக் கவுண்டம் பட்டியில் நடைபெற்றது. வடக்கு  செயலாளர் என்.பிரவின்குமார், மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் உள் ளிட்ட முன்னணி ஊழியர்கள் விண்ணப் பங்கள் பெறும் பணியில் ஈடுபட்டனர்.