tamilnadu

img

மகளிர் சுயஉதவிக் குழுவில் ஊழல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கம் மனு

சேலம், செப். 8- மகளிர் சுயஉதவிக் குழு வில் ஊழலில் ஈடுபட்டவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் மனு அளித்தனர். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஆதரவற்றோர், விதவைகள், உடல் ஊனமுற்றோருக்கு மானியத்துடன் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பன மரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபாளையம் கிராம பஞ்சாயத்தில் மக ளிர் சுய உதவிக்குழு அளவிலான கூட்ட மைப்பில் கடந்த ஆறு வருடங்களாக செய லாளர், பொருளாளர், கணக்காளர் ஆகிய மூவரும் ரூ. 50 லட்சம் வரை கையாடல் செய்துள்ளனர்.

 எனவே, இதுதொடர்பாக மாவட்ட நிர் வாகம் உரிய விசாரணை நடத்தி துறை ரீதி யாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.பர மேஸ்வரி, செயலாளர் ஞானசௌந்தரி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.