tamilnadu

சேலத்தில் டாஸ்மாக் குடோன் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

சேலம், ஜூலை 5- சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் குடோன் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகேயுள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கி ருந்து தான் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து கடைக ளுக்கும் மதுபானம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலை யில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. இதில், 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குடோன் மூடப்பட்டது. இத னைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அங்கு பணியாற்றி வரும் வாகன ஓட்டுநர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.