tamilnadu

img

அரசு பள்ளிகளில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

இளம்பிள்ளை,செப்.5- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை ஊராட்சி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அய்யனூர், காலிங்கனுர், தாடிக்காரனுர், சின்ன மாரியம்மன் கோவில் ஆகிய பகுதி களில் உள்ள பள்ளிகளுக்கு 2 ஆயிரம் பழ மரக்கன்றுகளை நம்மாழ்வார் இயற்கை மீட்டெடுப்பு குழுவின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.  இதில் கொய்யா, நெல்லி, மலை நெல்லி உள்ளிட்ட ஐந்து வகையான பழக் கன்றுகள் வழங்கப்பட்டன. இது குறித்து நம்மாழ்வார் இயற்கை மீட்டெடுப்பு குழு வினர் தெரிவிக்கையில்,  “கடந்த மாதம் கஞ்ச மலையில்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 20 வகையான விதைகளை எங்களது குழு வினர் விதைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து தப்பகுட்டை  ஏரி மற்றும் கண் மாய், வாய்க்கால்களில் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும்  தப்பட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடுகளை தடுப்பதற்காக  பழ வகை செடிகளை வழங்கியுள்ளோம்” என தெரிவித்தனர்.  இந்த பழவகை செடிகளை பள்ளி மாணவ, மாணவிகள் எவ்வாறு தங்களது வீடுகளில் வளர்த்து வருகிறார்கள் என்று  ஒவ்வொரு வருடமும் கண்டறிந்து அவர் களுக்கு உரிய பரிசு வழங்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி  ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் கிராம  நிர்வாக அலுவலர் பூபதி, மாணவ, மாணவிகள், நம்மாழ்வார் இயற்கை மீட்டெ டுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோபி,  சரவணன் மற்றும் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.