tamilnadu

img

ஏரியில் கட்டிட கழிவுகள் கண்டு கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

இளம்பிள்ளை, டிச.14- இளம்பிள்ளையில் உள்ள ஏரியில்  கட்டிட   கழிவுகள் மற்றும் குப்பை களை கொட்டப்படு கின்றன. இதனை பேரூ ராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சேலம் மாவட்டம்,  இளம் பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில்  சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் பழமை வாய்ந்த ஏரி உள்ளது. இந்த ஏரியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு  திரவ கழிவு மேலாண்மை திட்டத் தின் கீழ் ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் தூய்மை பணியானது முழுமை யடையாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இளம் பிள்ளை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கட்டிட கழிவுகளான கற்கள், மண், குப்பை  மற்றும் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப் படும்  கழிவுகளை ஏரி கரையில் கொட்டப் பட்டு வருகின்றன.  முன்னதாக இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நீராதாரமாக விளங்கியது. தற்சமயம் ஏரி பராமரிப்பின்றி கிடக் கின்றன.மேலும் குப்பைகளை கொட்டி ஏரியை மூடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம்  துணை புரிந்து வருவதாக இயற்கை ஆர்வ லர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வருங்கால சந்ததியினருக்கு பயன்படுத்தும் வகையில் ஏரியினை  தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என தெரிவித்தனர்.