tamilnadu

img

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

சேலம், ஜன. 29-  தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் முதல் திண்டுக்கல் பிரிவு வரை ஆய்வு மேற்கொண்டார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், திண்டுக்கல்-கரூர்-சேலம் (திண்டுக் கல் நீங்கலாக) பிரிவில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். இதில் சேலம் ரயில்வே கோட்டத்தின் புதிய முயற்சியாக, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதல் வெளிப்புற விளம்பர இலச்சினையை தொடங்கி வைத்தார். இதன்பின் நாமக்கல் ரயில் நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட பூங்கா மற்றும் ஒருங்கிணைந்த பயணச் சீட்டு முன்பதிவு மையம், சாதாரண பய ணச்சீட்டு மையம், புதிய சரக்கு அலுவல கம், பயணிகளுக்கான எல்.இ.டி. முன்னறி விப்பு பலகை ஆகியவைகளை திறந்து வைத்தார். நாமக்கல்-சேலம் இடையே விரைவு ரயிலை இயக்கி வைத்து ஆய்வு செய்த பிறகு மரக்கன்று நடும்விழா நடை பெற்றது. சேலம் ரயில் நிலையம்: சேலம் கிழக்கு ரயில்வே குடியிருப் பில் புதுப்பிக்கப்பட்ட இந்தி பவன், சிறார் பூங்காவை ஆய்வு செய்தார். பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான பிரெய்லி பலகை ஆகியவைகளை ஆய்வு செய்தார். மேலும் சேலம் ரயில் நிலையத் தின் 5 ஆவது நடைமேடையில் மேற்கொள் ளப்படும் நடைமேடை மேம்பாட்டு பணி கள், நடைமேடை மேற்கூரை அமைத்தல், மின்தூக்கி மற்றும் நகரும் படிகட்டுகள் வசதி களை மதிப்பீடு செய்தார். இதேபோல் பய ணிகளின் வசதிக்காக நடைமேடை எண் 3 இல் நிறுவப்பட்ட உடல் எடை, ரத்த அழுத் தம் மற்றும் சர்க்கரை அறியும் வசதி மற்றும் மசாஜ் இருக்கை ஆகியவற்றை ஆய்வு செய் தார். இந்த ஆய்வின்போது சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் மற்றும் ரயில் பாதுகாப்பு முதன்மை ஆணையர் மற் றும் தெற்கு ரயில்வேயின் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.