tamilnadu

ஏற்காடு அரசு பள்ளியில் ஆண்டு விழா

ஏற்காடு, மார்ச் 1- ஏற்காட்டில், அரசு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ராபர்ட் மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் மாலதி ஆகியோர் தலைமை தாங்கினார். இவ்விழாவில் மாணவிகளின் நாடகம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சிலப்பதகார காப்பியம் குறித்தும் நாடகம் அரக்கேற்றப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புகழேந்தி, ஏற்காடு ஊராட்சி  மன்ற துணை தலைவர் பாலு, முன்னாள் துணை சேர்மேன் சுரேஷ் குமார் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.