சேலம், ஆக. 25- அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும். கொரோனா கால விடுப்பிற்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு துணைத் தலைவர் இளவழகன், எல்பிஎப் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணி, அரசு விரைவுப் போக்கு வரத்து சங்கத்தின் மாநி்ல துணை பொதுச்செயலாளர் என்.முருகே சன், சாலைப் போக்குவரத்து சங்கத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், பள்ளப்பட்டி கோட்டதுணை பொது செயலாளர் செந்தில்குமார், ஓமலூர் சிஐடியு சங்க கோட்டத்தலைவர் செம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக் கை முழக்கங்களை எழுப்பி னர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட அனைத்து பணிமனைகள் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. இதில், அனைத்து போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு பணிமனை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச கிளைத் தலைவர் சின்னுசாமி தலைமை வகித்தார்.
இதில், சிஐடியு நிர்வாகிகள் தீனதயாளன், எஸ்.முருகேசன், ஏஐடியுசி கிளைத் தலை வர் எஸ்.குணசேகரன், எல்பிஎப் சங்க துணை தலைவர் சிவக்குமார், டி.டி.எஸ்.எப். பொதுச்செயலாளர் பி.மனோகரன், ஏ.ஏ.எல்.எல்.எப் சங்க துணைத்தலைவர் பி.முருகன், ஓய்வு பெற்றோர் தலைவர்கள் மற் றும் அனைத்து சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.