tamilnadu

img

துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய திருமண தம்பதி

ஏற்காடு, பிப். 4- சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தங்களது திருமண நாளை யொட்டி, துப்புரவு பணியாளர்களுக்கு திருமண தம்ப தியினர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர். ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்தவர் திசாநாயகம் (43). மதுபானக்கடை பணியாளர்.  இவரது மனைவி ஜெயந்தி (36). சவால் அறக்கட்டளை இயக்குனர். இவர்களது 19  ஆண்டு திருமண நாளான திங்களன்று டவுன் காந்தி பூங்கா பகுதியில் துப்புரவு பணியாளர்களுடன் கொண்டாடினர். பின்னர், ஏற்காடு ஒன்றியத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 17 பேருக்கு பொன்னாடை அணிவித்து கவுர வித்தனர். மேலும், ரப்பர் கையுறை, காலணிகள்  மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங் கினர்.