tamilnadu

img

மகாகவி பாரதியார் 137 ஆவது பிறந்த தின கொண்டாட்டம்

சேலம்,டிச11- மகாகவி  பாரதியாரின்  137 ஆவது பிறந்த நாளை  பல்வேறு அமைப்புகள்  விமர்சியாக கொண்டாடினார். சேலம் ரயில் நிலையம் ரோடு எதிரில் உள்ள பாரதியார் திருவுருவச் சிலைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மலை வாழ் இளைஞர் சங்கத்தின் மாநில செயலாளர் என். பிரவீன் குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர் பி. தங்கவேலு கருத்துரையாற்றினார். இதில் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வி. வெங்கடேஷ், வடக்கு மாநகர தலைவர் பி. சதீஷ்குமார், துணைத் தலைவர் சசிகுமார், துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், பாரதியார் மக்கள் நல் வாழ்வு சங்கம் மற்றும்  தமிழியக்கத்தினர்  பார தியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இதில் அமைப்பின் செயலாளர் சி.ஆர்.தேவிகா, பாரதியாரை பற்றி சிறப்புரை ஆற்றினார். இதைத்தொ டர்ந்து பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்க அலுவலகத்தில் பாரதியின் கவிதை சரணா லய கூட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில்  தமிழியக்க மாவட்ட செயலாளர் இலக் கிய அருவி.கீரை பிரபாகரன், உயிர் மெய் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் ஓ.டெக்ஸ் இளங்கோவன், லோக் அதாலத் மாவட்ட தமிழியக்க செயலா ளர் முத்துராமய்யன், பாரதியார்மக் கள் நல்வாழ்வு சங்கம் செயலாளர் டி.நீலா ஆகியோர் பங்கேற்றனர். தேசிய சமூக இலக்கிய பேரவையின் சார் பில் மாநகர தலைவர் என். சிவலிங்கம் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப் பின் மாநிலத் தலைவர் தாரை.அ.குமரவேலு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மதுரபாரதி சேலம் ரோட்டரி சங்க தலை வர் க.பழனியப்பன் உள்ளிட்ட தமிழ் ஆர்வ லர்கள் பங்கேற்றனர். தருமபுரி மகாகவி பாரதியாரின் 137-வது  பிறந்த தினத்தை முன்னிட்டு தருமபுரி செங்கொ டிபுரத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர் அமைப்பி னர் பாரதியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.சிசுபாலன், டி.எஸ்.ராமச்சந்திரன், நகரசெயலாளர் ஆர்.ஜோதிபாசு, முற் போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகைபாலு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.