tamilnadu

img

“எனது பெயரை எழுதிக் கொள்ளுங்கள் தோழர்”

இராமேஸ்வரத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தீக்கதிர் நாளிதழுக்கு சந்தாக்கள் சேர்த்திட கட்சியின் மாநிலக்குழு அறை கூவல் விடுத்திருக்கிறது என்று கட்சி யின் முடிவுகளை மாநிலக்குழு உறுப் பினரும், திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி விளக்கிக் கொண்டிருந்தார். அந்த விளக்க உரை முடிந்த அடுத்த நிமிடமே கூட்டத்திலிருந்து எழுந்து வந்தார்  சக்தி கனி. சற்றும் யோசிக்காமல் தன் கையிலிருந்த பணத்தை எடுத்து தீக்கதி ருக்கான முதல் ஆண்டுச் சந்தாவாக எனது பெயரை எழுதிக் கொள்ளுங்கள் தோழர் என்று கண்களில் உற்சாகம் பொங்க அளித்தார். தோழர் சக்தி கனி, ஒரு மீன் தொழி லாளி. இராமேஸ்வரம் கடற்கரையில் கொண்டுவரப்படும் மீன்களைக் கழுவி விற்பனைக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான ஏழை, எளிய தொழிலாளர்களில் ஒருவர் அவர். தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பற்றுதலும் பிடிப்பும் கொண்ட ஏராளமான மீன் தொழி லாளர்களில் அவரும் ஒருவர். கட்சி யின் கிளைச் செயலாளராகவும் செயல்படு கிறார். செப்டம்பர் 27 அன்று இராமச்சந்திர பாபு தலைமையில் நடைபெற்ற கிளைச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் இராமேஸ்வரம் ஒன்றியச் செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், கண்ணகி, மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இரா மேஸ்வரம் தீவில் மீன்பிடி தொழிலாளர் உட்பட அனைத்துப் பகுதி மக்களின் நலன்களுக்கான இயக்கங்களைத் தொட ர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 28 அன்று இரா மேஸ்வரம் முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்கள், முன்னணி ஊழி யர்கள் ஆகியோரையும் மீனவத் தொழி லாளர்களையும் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து உரை யாடினர்.