இராமநாதபுரம், ஜூன் 29- கொரோனா ஊரடங்கால் வாழ்வி ழந்து நிற்கும் மக்களிடம் மின்சாரக் கட்ட ணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூ லிக்கும் மின் வாரியத்தை கண்டித்தும் மின்கட்டணத்தை கொரானாவுக்கு முந்தைய மாதங்களில் வசூலித்த அதே கட்டணங்களை வசூலிக்க வேண்டுமென வும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்றது. இராமேஸ்வரம் தலைமை தபால் நிலையம், அக்காள் மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு ஆகிய பகுதியிலுள்ள தபால் நிலையங்களில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.கரு ணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா, எம்.கருணாமூர்த்தி, ஏ.அசோக், கே.மணி கண்டன், ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின், ஏ.ஆரோக் கிய நிர்மலா, டி.மாரிமுத்து, ஏ.ஞான சேகர், டி.ராமச்சந்திரபாபு, வி.பழனிக்குமார், கே.கார்த்திக், க.வெங்கடேஸ்வரி, கே. தர்மராஜ், பி.முத்துமாரி, டி.நம்புராஜன், ஏ.சகாயம், கே.முனியசாமி, எம். ரவிச்சந் திரன், பி.மணிக்கண்ணன், டி.அருள் தாஸ், பிளமின்ராஜ், சரோஜா, எஸ். எஸ். பாரதி, ஜெ.பவுல்ராஜ், எஸ்.பஞ்சா, கே. ரங்கநாதன், ஜி.தேவதாஸ், வடகாடு என். கார்த்திக், எம்.மணிகண்டன், சியோச்சி ராஜ், சுரேஷ் கிரகோரி, பி.முத்துப்பாண்டி, என்.அகிலன், எம்.தர்மபுத்திரன், பி.ஜீவ குரு, மாணவர் சங்க நிர்வாகி வில்லியம் ஜாய்சி, திலீபன், பி.அமுதா, கே.மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.