tamilnadu

img

தேசியவாதம் பேசியே சர்வாதிகாரிகள் வருகிறார்கள்

ஜோத்பூர்:

ராஜஸ்தானில் அண்மையில் நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட் முதல்வரானார்.


இந்நிலையில், மக்களவைத் தேர்தலில், ஜோத்பூரில் தனது குடும்பத்தினருடன் வாக்கைப் பதிவு செய்த அசோக் கெலாட், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


ஒவ்வொரு சர்வாதிகாரியும் முதலில் தேசியவாதம் பேசியே மக்களைக் கவர்ந்ததாக வரலாறு சொல்கிறது. இதைத்தான் மோடி தற்போது செய்கிறார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.மோடி சர்வாதிகாரியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. அது நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி குறித்து பேசாமல் தேசியவாதம் மற்றும் தேசப்பற்று குறித்து மோடி பேசுகிறார். அப்படியென்றால் அவரைத் தவிர மற்றவர்களுக்கு தேசப்பற்று கிடையாதா? தேசியவாதம் குறித்து பேசுவதன் மூலம், அண்மையில் பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்தவே செய்கிறார். இதனால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கெலாட் கூறியுள்ளார்.