tamilnadu

img

மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர், ஆக.5- காஷ்மீர் பிரிவினை குறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளது மோசமான விளைவு களை ஏற்படுத்தும். இந்த சிறப்பு அந்தஸ்து காஷ்மீரில் மற்ற மாநில மக்கள் சொத்துகளை வாங்குவ தைத் தடுத்திருந்தது. ஆனால், இன்று சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மத்திய அரசு தன்னிச்சையாக அதிர்ச்சிகரமான முடிவை அமல்படுத்தியுள்ளது. இந்த முடிவு அபாயகரமான விளைவு களை ஏற்படுத்தும். 1947-ல் காஷ்மீரை இணைக்கும்போது காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு இப்போது மீறி மக்கள் அரசின் மீது கொண்டி ருந்த நம்பிக்கையைச் சீர்குலைத்தி ருக்கிறது. இது காஷ்மீர் மக்கள் மீதான திணிப்பு.  ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத் தாக்கையும் காவல் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்துவிட்டு இப்படி ஒரு அறிவிப்பை அரசாங்கம் அறி வித்திருப்பது அரசியல் சாசனத்து க்கு எதிரானது. இது காஷ்மீர் மக்க ளை வஞ்சிக்கும் நோக்கமுடையது” எனத் தெரிவித்துள்ளார்.