ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 27 ரக விமானம் விபத்துக்குள்ளாது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 27 யுபிஜி ரக போர் விமானம் இன்று காலை பார்மர் விமானப்படை தளத்தில் இருந்து ஜோத்பூரிலிருந்து 120 கி.மீ தூரம் சிரோஹி அருகே ஷோகான்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இஞ்சின் கோளாறு காரணமாக இன்று காலை 11.45 மணியளவில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேபோல், ராஜஸ்தான் ஜெய்சால்மர் பகுதியில் கடந்த மாதம் மிக்-27 ரக போர்விமானம் ஒன்று பயிற்சி வகுப்பின்போது விபத்துக்குள்ளானது. அந்த விபத்தின் போதும் அதனை இயக்கிய விமானி பத்திரமாக உயிர்தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.