காபுல்
தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரான ஹிரட் பகுதி விமான நிலையத்திலிருந்து தலைநகர் காபுல் நோக்கி இன்று காலை அரியனா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 70-க்கும் அதிகமான பயணிகள் உட்பட 83 பேர் இருந்தனர். கஜினி பகுதியைக் கடந்த போது எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விலகி தரையில் விழுந்து நொறுங்கியது. உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் விபரம் பற்றி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால் விமானத்திலிருந்த 83 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் தாலிபான் மீது சந்தேகம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.