‘ரோபோட்’ இருந்தும் கும்பகோணத்தில் துயரம்
சிஐடியு தலையீட்டால் ரூ.11.5 லட்சம் நிவாரணம் வழங்கல்
கும்பகோணம், நவ.15- கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிக்கு பெங்களூரை சேர்ந்த இன்பிரயின் என்ற தனியார் நிறுவனத் தில் சார்பில் பணி அமர்த்தப்பட்டு ஒப் பந்தத் தொழிலாளர்கள் மூலம் கழிவுநீர் அடைப்பு பணிகளை செய்து வரு கின்றனர். இந்த நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் எதிரே உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிக்காக தனி யார் நிறுவனத்தில் உள்ள கழிவு நீர் அடைப்பு இயந்திரமான காமி என்ற லாரி வரவழைக்கப்பட்டது. கழிவு நீர் அடைப்பு வாகனத்துடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ராஜா, வீர மணி மற்றும்மேலக்காவேரி தங்கையா நகரைச் சேர்ந்த சாதிக்பாட்சா (45) உள் பட 4 பேர் கழிவுநீர் அடைப்பு எடுப்ப தற்காக பாதாளச் சாக்கடை கிணற்றில் இறங்கினர். அப்போது சாதிக் பாட்சா விஷவாயு தாக்கி பாதாளச் சாக்கடை கிணற்றில் விழுந்தார்.
இதில் பதற்றமடைந்த மற்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தனர். இதனால் பாதாளச் சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாக வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர். தகவலறிந்த சிபிஎம், விசிக மற்றும் சமூக ஆர்வலர்கள் 50 க்கும் மேற்பட் டோர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே அமர்ந்து மீட்புப் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நகர்நல அலு வலர் பிரேமா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாதாளச் சாக்கடையில் விழுந்த சாதிக்பாட்சாவை தீயணைப்புதுறை யினர் தேடினர். சுமார் அரை மணி போராட்டத்திற்கு பிறகு சாதிக்பாட்சா உடலை இறந்த நிலையில் மீட்டு கும்ப கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரேத பரிசோத னைக்கு பிறகு கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறையினர் ஒப்பந்த நிறுவனம் ஆகியோர் எவ்வித நிவாரணமும் வழங்காமல் உடலை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிபிஎம், சிஐ டியு உள்ளிட்ட இயக்கங்களின் தலை வர்கள் பணியில் இருந்த போது மரண மடைந்த தொழிலாளி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்காமல் பிரேதத்தை எடுக்க முடியாது என முற்றுகையில் ஈடுபட்டனர்.
ரூ.11.50 லட்சம்
போராட்டத்தை தொடர்ந்து சிஐடியு தலையீட்டின் பேரில் நகராட்சி ஆணையர் ஜெகதீசன், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் பிரேமா ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை அடிப் படையில் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஈமச் சடங்கிற்காக 1.50 லட்சம் ரொக்கமும் உடனடியாகப் பெற்று சாதிக் பாட்சாவின் தாயாரிடம் தரப்பட்டது.
இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ஜேசுதாஸ், மாவட்ட துணை தலைவர் ஜீவபாரதி, பொருளாளர் கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், நகர செயலாளர் கே.செந்தில்குமார், விசிக மாவட்டச் செயலாளர் தமிழருவி விவேகானந்தன், வழக்கறிஞர் இளங்கோவன், தவ்ஹீத் ஜமாத் ஜாபர் அயூப்கான் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர். (ந.நி.)