14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கக் கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று (பிப்13) சென்னை பல்லவன் இல்லம் முன்பு பெருந்திரள் முறையீடு கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன், பழனி, தனசேகரன், சிஐடியு போக்குவரத்து சம்மேளனப்பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், துணைப்பொதுச்செயலாளர் வி.தயானந்தன், ஆறுமுகம் (ஏஐடியுசி), ந.க.நாராயணன்(ஐஎன்டியூசி), சுப்பிரமணிப்பிள்ளை(எச்எம்எஸ்), டாக்டர். பத்மநாபன் (டிடிஎஸ்எப்), ஆவடி அந்திரிதாஸ்(எம்எல்எப்), அர்ச்சுணன்(ஏஏஎல்எல்எப்), மோகன்(டிடபுள்யூயூ) ஆகியோர் பங்கேற்று பேசினர்.