tamilnadu

img

உள்வாங்கிய கடல்: இராமேஸ்வரம் மக்கள் அச்சம்

இராமேஸ்வரம்:
இராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன், திடீரென 100 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியதால்  மீனவர்கள் மற்றும் சுற் றுலா பயணிகளிடயே அச்சம் நிலவியது.இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி,  கடலோர பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சூறைக்காற்று வீசி வரும் நிலையில், இராமேஸ்வரம் மற்றும் சங்குமால் துறைமுகப்பகுதிகளில், சுமார் 100  மீட்டருக்கும் மேல் கடல் உள்வாங்கியதால் அப்பகுதியில் அச்சம் நிலவியது. மேலும் சூறைக்காற்று தொடருவதால், மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. மேலும் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சுமார் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.