சென்னை,பிப்.11- தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க் கைக்கு நன்கொடை வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்ச ரித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்களின் உடல் நலம் தொடர்பான கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்கு முன் விளம்பரத் தட்டிகள் வைத்து மாண வர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தனியார் ட்யூஷன் மையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே டியூ ஷன் சென்டர் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் மாணவர் கள் இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங் களை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.