tamilnadu

அரசு அச்சகங்களில் மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு பணி

சென்னை,ஜூலை 24- மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு அரசுத் துறையில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.  தமிழக எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரியும் மொத்த பணி யாளர்களில் 14 சதவீதம்  பணியாளர்கள் மாற்றுத்திற னாளிகள் ஆவர். இந்நிலையில் பூவிருந்த வல்லி அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில் புத்த கம் கட்டும் பயிற்சி பெற்ற  7 பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு அரசு அச்ச கங்களில் இளநிலை புத்த கம் கட்டுநர் பணிக்கான பணி நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம் பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.