காஞ்சிபுரம் அருகேயுள்ள மேல்க்கதிர்ப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபுதாஸ்(32). சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்திலிருந்த ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த இயந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் கேட்பாரற்று இருந்தது. அந்த பணத்தை கொண்டு சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப் பிரியாவிடம் வழங்கினார்.