நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பில் தலைமறைவாக இருந்த மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று தனிப்படையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மகன் மருத்துவர் ஆக வேண்டும் என எண்ணத்தில் ஆள்மாறாட்டம் செய்ததாக மாணவனின் தந்தை வெங்கடேசன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.