திருநெல்வேலி, அக். 21- நெல்லை மாவட்டம் நாங்கு நேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இறுதி நிலவரப்படி 66.35சதவீத வாக்குகள் பதிவாகின. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்க ளன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் காலை முதலே பொதுமக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.தொகுதிக்கு உட்பட்ட சீவலப்பேரி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது.இது ஒரு புறம் இருக்க, கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் வந்தனர்.நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நாராயணன் காலை ரெட்டியார்பட்டியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். அது போல் முன்னாள் திமுக எம்எல்ஏ., கருப்பசாமி பாண்டியன் பாளை., அருகே திருத்து பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மேலும் வாக்குப்பதிவை பொறுத்தவரை களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதிலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு அந்த கோளாறு சரி செய்யப்பட்டு காலை 9.45 மணிக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.
விக்கிரவாண்டியில் 77 விழுக்காடு வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகள் பதிவானது. இறுதி நிலவரம் செவ்வாய் கிழமை தெரியவரும். விக்கிரவாண்டி தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.79 விழுக்காடு வாக்கு கள் பதிவாகியிருந்தது. இந்த தொகுதி யில் காலையில் இருந்தே விறுவிறுப் பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 அன்று நடைபெறுகிறது. அன்று முற்பகலிலேயே முடிவுகள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.