tamilnadu

img

உலகளவில் இணையதள தரவரிசை பட்டியலில் இந்தியாவிற்க்கு 57 -வது இடம்

உலகளவில் இணையதள பயன்பாடும் ,இணையதளத்தை பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.இந்நிலையில் டிஜிட்டல் குவாலிட்டி ஆப் லைப், 2020 தனது தரவரிசை பட்டியளை ஆகஸ்ட் 20,2020 -ல் வெளியிட்டுள்ளது.இந்த தரவரிசையானது உலகம்  முழுவதும் இணையதளத்தை பயன்படுத்தும் நாடுகளில் தரமான மற்றும் வேகமான இணையதள சேவை,பாதுகாப்பான இணையதள சேவை,பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு ,இணையதளத்தை பயன்படுத்த அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் போனவற்றின் அடிப்படையில் பட்டியளை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் குவாலிட்டி ஆப் லைப், 2020 தரவரிசையில் 85 நாடுகள் பங்கேற்றனர்.இதில் இந்தியா 0.5 மதிப்பெண்கள் பெற்று  57 - வது இடத்தில் உள்ளது .டென்மார்க் 0.79 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே தரவரிசைப் பட்டியலில் இந்தியா , மலிவான இணையதள சேவை வழங்குவதில் 9 -வது இடத்திலும்,தரமான மற்றும் வேகமான இணையதள சேவை வழங்குவதில் 78 -வது இடத்திலும் மற்றும் கணினிமயமான உள்கட்டமைப்பில் (டிஜிட்டல் இந்தியா)  79- வது இடத்திலும் உள்ளது.

உலகளவில் பாதுகாப்பான இணையதள சேவை வழங்குவதில் (internet security) இந்தியா 57 -வது இடத்தை பெற்றுள்ளது.இதில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் முழுமையான இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா 15 -வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.