ஸ்பெயினில் கனமழை கொட்டி தீர்த்தாலே நமது இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய்விடும்.. 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஜஸ்ட் 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்து ஓய்ந்திருந்தால் நினைக்கவே நெஞ்சம் பகீர் என்கிறது. அப்படித்தான் ஸ்பெயினின் சிவில்லி பிராந்தியத்தில் உள்ள எஸ்தெபா நகரம் இருக்கிறது. இந்த நகரில் செவ்வாய்க்கிழமை வெளுத்து வாங்கிய மழையால் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்க்கிக் கிடக்கின்றன.
சமூக வலைதளங்களில் இந்த திடீர் பெருமழை வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. சீராக வெளியேறி வரும் மழைவெள்ளம் திடீரென சுனாமியாய் மாறி பேரிரைச்சலுடன் பாய்ந்தோடியது.
இந்த பகுதியில் கனமழை கொட்டும் என ஏற்கனவே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நினைத்துப் பார்க்க முடியாதபடி பெருவெள்ளத்தை கொட்டிவிட்டு போனது மழை. இதனால் அந்த நகரமே இயல்பு வாழ்க்கையை தொலைத்துவிட்டது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.