tamilnadu

img

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

 சென்னை,டிச.15- உள்ளாட்சித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் ஒவ்வொரு மாவட்ட த்திற்கும் தேர்தல் பார்வை யாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படு வார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரி வித்திருந்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சேலம் மாவட்ட தேர்தல் பார்வை யாளராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் நாகப்பட்டினத்துக்கு ஞானசேகரன், நாமக்கல் மாவட்டத்துக்கு ஜெகநாதன், ராமநாதபுரத்துக்கு அதுல் ஆனந்த், நீலகிரி மாவட்ட த்துக்கு ஜோதி நிர்மலா ஆகியோர் தேர்தல் பார்வை யாளர்களாக நியமிக்கப்பட்டு ள்ளனர்.