tamilnadu

img

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி செங்கல் சூளை தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் மே 5- திருவள்ளூர் மாவட்டம், திருக்கண்டலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் வருவாய் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். எனவே, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி மூட்டை முடிச்சுகளுடன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தற்காலிக இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.